நம் பழைய மாணவர் பாண்டியன், எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் இடுகைகளில் அவர் எழுதிய பதிவொன்றிற்குப் பின்னூட்டமாக கீழே எழுதியுள்ளதை வெளியுட்டுள்ளார்.
கழுகின் ரத்தம் பற்றிய சில கருத்துக்கள்
டியர் சாரு,
கழுகின் ரத்தம் மூன்றாம் பாகத்தில் மதமாற்றம் பற்றி எழுதப்பட்டிருந்த விஷயங்களை படித்த போது, எனக்குள் எழுந்த சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நடுநிலையாளர்களை இந்துத்துவா பக்கம் இழுக்கும் மிகப் பெரும் ஆயுதம் மதமாற்றம். இது குறித்து லிபரல் சிந்தனையாளர்கள் கருத்துக் கூறாமல் தொடர்ந்து மௌனம் சாதிப்பது, அவர்கள் எந்த அளவுக்கு மதச்சார்பின்மை மேல் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.
பெரும்பாலான இந்துத்துவா சிந்தனைகள் வெறும் குப்பை என்பது சாதாரணமாக சிந்திக்கும் எவருக்கும் தெரிந்ததே. ஆனால் மதமாற்றம் பற்றிய விவாதம் வரும் போது இந்துத்துவாவின் அத்தனை குதர்க்கங்களும் மறக்கப்பட்டு, இந்துத்துவா சிந்தனையாளர்கள் ஒரு சேவியரை போல் பார்க்க படுகின்றனர். சோ, குருமூர்த்தி போன்றவர்களுக்கு கூடும் கூட்டம், அவர்களின் பழமை வாதத்தின் முட்டாள் தனங்களை ஓரளவு சகித்து கொள்வதற்கு, இன்று தமிழகத்தில் மத மாற்றத்தை பற்றி இவர்கள் தொடர்ந்து வெளிப்படையாக பேசுவதும் ஒரு காரணம்.
இதனால் சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. மத மாற்றத்தை பற்றியோ அல்லது பேராயர்களின் செயல்பாடுகளை பற்றி ஒருவர் பேசுகையில், பேசும் நபரின் மேல் இந்து மத வெறியர் என்ற முத்திரை குத்தப்படுகின்றது. அரசியல் வாதிகளுக்கும் பேராயர்களுக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி சொல்லவே வேண்டாம். சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள பேராயர்களின் மேல் கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஒருவர் பேராயராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் கர்த்தருக்கும் சற்றும் சம்பந்தம் இருக்க முடியாது, கர்த்தருக்கு சுவிஸ் வங்கியில் அக்கௌன்ட் இருந்தால் ஒழிய.
தாங்கள் தொண்டு நிறுவனங்களை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். தங்களுக்கு நேரம் இருந்தால் இந்த இணைப்பை தயவு செய்து பாருங்கள்
http://saveamericancollege.blogspot.com/2008/04/violoation-of-child-rights.html
பிரச்சினை ஒன்னும் இல்லை, மதுரை பேராயருக்கு, அமெரிக்கன் கல்லூரி வேண்டும். ஏன் எதற்கு என்ற கேள்விக்கு நாம் வரவில்லை. அந்த கல்லூரி தனக்கு வேண்டும் என்பதற்காக, தன்னுடைய தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை (சுனாமியால் அனாதைகளானவர்கள்), கோரிப்பாளையம் அருகே நடு ரோட்டில் சோறு தண்ணி இல்லாமல் இரவு முதல் விடிய விடிய தர்ணா செய்ய வைத்தார் இந்தப் பேராயர்.(மேற் கண்ட இணைப்பில் உள்ள அத்தனை புகைபடங்களும், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வெளியிடப்பட்டவை)
மதுரையைப் பற்றிப் பேசியதும் மன உளைச்சல் கடுமையாகிறது. இத்துடன் இந்தக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.
நன்றி.
பாண்டியன்
No comments:
Post a Comment