EMBLEM

EMBLEM

Wednesday, March 23, 2011

'மாணவர்கள் கல்வி நலன் பாதிப்பு'

Thinamani dated: 22 Mar 2011

மதுரை, மார்ச் 21: அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ். கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

4000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்துவரும் இக்கல்லூரியில் முதல்வர் பிரச்னை காரணமாக பேராசிரியர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பிரச்னையைத் தீர்க்க அமைக்கப்பட்ட அரசு உயர்நிலைக் குழுவும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

பருவமுறைத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் செய்முறைத் தேர்வுகள், அக மதிப்பீட்டுத் தேர்வுகள் நடைபெறாத சூழ்நிலை உள்ளது.

கல்லூரிப் பிரச்னை தீவிரம் அடையும் நிலையையும் தேர்வுகளைக் கருத்தில் கொண்டும், தாற்காலிகமாக கல்லூரி நிர்வாகத்தை மதுரை மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அரசு நியமித்த குழு கல்லூரியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரியில் வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

சங்கத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.லெனின், புறநகர் மாவட்டச் செயலாளர் மா.கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments: