EMBLEM

EMBLEM

Monday, March 21, 2011

அமெரிக்கன் கல்லூரி வன்முறைச் சம்பவத்தில்

குற்றவாளிகளைக் கைது செய்யாவிடில் தொடர் உண்ணாவிரதப்போராட்டம்

வெளியீடு: தினமணி மதுரை மார்ச் 20

அமெரிக்கன் கல்லூரியில் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யாவிடில் மார்ச் 21ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்று கல்லூரியின் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீரின் எதிர்தரப்பு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அக்கல்லூரியின் பேராசிரியர்கள் ஆர்.கே.அழகேசன், ப.குமாரசாமி. டி.வின்பிரட் தாமஸ், பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

பாரம்பரியமிக்க அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தில் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் தலையிடக்கூடாது என்று 2009 ஆகஸ்ட் (இந்த இணையதளத்தினைப் பார்க்க: http://judis.nic.in/judis_chennai/qrydisp.aspx?filename=20120) உயர்நீதிமன்ற நீதிபதி அளித்ததீர்ப்பில் தெரிவித்த பிறகும் அவரும் அவரது உறவினரும் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தில் ஈடுபட்டு கல்லூரியில் அமைதியற்ற சூழ்நிலை உருவாக்கிவருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர்கள் மீதும், மாணவர்கள் மீதும் மற்றொருதரப்பு (பேராயர் தரப்பினர்) மாணவர்களையும், வெளியாட்களையும் ஏவி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபடவைத்த குற்றவாளிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத்தயங்குவது ஏன்?

கல்லூரிக் கல்வி இயக்குனரகம், மாவட்ட நிர்வாகம் ஆகியவையும் இப்பிரச்னையில் உரிய அக்கறைகாட்ட மறுப்பது ஏன்? இதன் பின்னால் பெரிய சூழ்ச்சி இருப்பதாகவே சந்தேகிக்கிறோம்.

கல்லூரி சுதந்திரமாக நடைபெறுவதற்கு உயர்நிலைக் குழுவின் விசாரணையை உடனே தொடங்கவேண்டும். அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மார்ச் 14ம் தேதி அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறை உதவியுடன் ரெளடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பிரவீண், செல்வம், ஞானதுரை ஆகியோரைக் கைது செய்யவேண்டும்.

சம்பவத்தில் தொடர்புடைய தவமணி கிறிஸ்டோபர், ஸ்டீபன், அருள்தாஸ், அருள் அரசு, முதல்வர் (போலி) மோகன் ஆகியோர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கைது செய்து அவர்களுக்குரிய சட்டப்படியான தகவல்கள் தராமல பொய்யான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதை நிறுத்தி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

பேராயர் தரப்புக்கு ஆதரவாகச் செயல்படும் தல்லாகுளம் காவல் ஆய்வாளர் சிதம்பரமுருகேசனை உடனடியாக இடமாற்ற வேண்டும்.

தல்லாகுளம் காவல் நிலையத்தில் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் குழுவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்படவேண்டும்.

இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படாதபட்சத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள் மார்ச் 21ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம் என்றனர்.

No comments: