வெளியீடு: தினமணி மதுரை மார்ச் 20
அமெரிக்கன் கல்லூரியில் 3 மாதங்களாக நீடித்துவரும் இருதரப்பினரின் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வரை அக்கல்லூரியை தற்காலிகமாக தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்விப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கோட்டத்தின் போது அமெரிக்கன் கல்லூரி தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் கல்விப் பேரவை உறுப்பினர் பேரசிரியர் அழகேசன் பேசியது:
- 130 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அமெரிக்கன் கல்லூரியில் தற்போது சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- 3 மாதமாக அக்கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
- 3400 மாணவர்கள் படிக்கும் இந்தக் கல்லூரியில் 200 பேர் மட்டுமே வகுப்புக்குச் செல்கின்றனர்.
- ஆசிரியர்கள் 3 மாதங்களாக சம்பளம் வாங்கவில்லை (இதில் அரசு மானியம் பெறும் இருதரப்பு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள் அடங்குவர்).
- ஆசிரியர்கள் உயிர், உடமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
- தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் காரணமாக 274 குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன.
- 97 நாட்களாக ஆசிரியர்கள் (மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், மாணவர்கள்) போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சொத்துப் பிரச்னை மற்றும் கல்லூரி முதல்வர் பிரச்னையை மையமாக வைத்து நடத்தப்படும் இப்போராட்டத்தால் மாணவர்கள் தத்தளித்து வருகின்றனர். அல்லூரியில் அமைதியின்மை நிலவுகிறது. ஆகவே, நிரந்தரக் கல்வி சூழல் ஏற்படவும், இப்பிரச்னைக்குத் தேர்வு காணவும் தற்காலிகமாக அமெரிக்கன் கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும். இதுதொடர்பாக கல்விப்பேரவையில் தீர்மானம் நிறவேற்றப்பட வேண்டும் என்றார்.
இதே பிரச்னை தொடர்பாக பேரசிரியர்கள் தேன்பண்டியன், அஜ்மல்கான், சேஷாத்ரி, எஸ். கிருஷ்ணசாமி, முத்தையா ஆகியோரும் பேசினர்.
கல்விப் பேரவை உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு துணைவேந்தர் இரா. கற்பககுமாரவேல் பேசியதாவது:
அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் வருத்தம் தரக்கூடியது. இது உணர்வுப்பூர்வமான பிரச்னையாகவும் உள்ளது. இப்பிரச்னை தொடர்பாக கல்விப் பேரவை உறுப்பினர்கள் பலரும் த்ங்களது பரிந்துரைகளை அளித்துள்ளனர். கல்லூரியின் பாதுகாப்பு, மாணவர்களின் நலன் ஆகியவற்றில் பல்கலைக்கழகம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
இப்பிரச்னையில் தமிழக அரசு அமைத்துள்ள குழு விசாரணையை விரைந்து நடத்துவதற்கு அரசுக்கு கடிதம் மூலம் பல்கலைக்கழகம் சார்பில் பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment