தினகரன், மதுரை 21-12-2010
மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தில் கல்லூரி இயக்குநர் உமா ராணி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
கல்லூரி சுமூகமாக நட த்த மீண்டும் அன்புத்துரை யை முதல்வராக நியமிக்க வேண்டும். கல்லூரி வளாகத் தில் உள்ள அடியாட் களை போலீசார் உட னே வெளி யேற்ற வேண்டும். உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பேராசிரியர் அழகேசன் தலைமை வகித்தார். பின்பு கோரிக்கையை வலியுறுத்தி பொறுப்பு முதல்வராக இரு ந்த அன்புதுரை தலைமையில் முன்னாள் முதல்வர் சின்ராஜ்ஜோசப் பேராசிரியர்கள் பிரபாகரன், சூர்யாகுமார், ரத்தன் உள்ளிட்ட பல பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் காமராஜ் இல்லாத காரணத்தால் டிஆர்ஒ திணேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனுவை கொடுத்தனர்.
No comments:
Post a Comment