EMBLEM

EMBLEM

Saturday, December 18, 2010

கல்லூரி கல்வி இயக்குனர்-பேராயர் செயல்பாடு

அமெரிக்கன் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் லஞ்ச ஒழிப்பு போலிசில் புகார்
மதுரை, தினமணி டிச: 18 சனிக்கிழமை

அமெரிக்கன் கல்லூரியின் முழுக் கட்டுப்பாட்டையும் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் வசம் கொண்டுவருவதற்காக நடைபெறும் முயற்சியில் கல்லூரி கல்வி இயக்குநரகம், அவருக்கு மறைமுகமாக உதவிவருவதாக கல்லூரி நிர்வாகக்கவுன்சில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் இருவரும் லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் புகார் மனுக் கொடுத்துள்ளனர். மனுவின் பிரதியை லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி, கல்லூரிக் கல்வி இயக்குனர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.
ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் ஜே.ஜான் சேகர், எஸ்.சூரியகுமார் ஆகியோரின் மனு விவரம்:
கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் சார்பில் அளிக்கப்பட்ட மறு பணி நியமனம் குறித்த பரிசீலனை கல்லூரி கல்வி இயக்குனருக்கு நவ. 1-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரையை கிடப்பில் போட்ட கல்லூரி கல்வி இயக்குநரகம், நவ. 30-ம் தேதி சின்னராஜ் ஜோசப்புக்கு ஒரு கடிதம் (இரவு 7.45 மணிக்கு ஃபாக்ஸ் மூலம்) அனுப்பியது.
கல்லூரி கல்வி இயக்குனரின் இச்செயல் உள்நோக்கம் கொண்டது. பேராயரை கல்லூரி நிர்வாகத்தில் தலையிடவும், கல்லூரி நிர்வாகத்தை திட்டமிட்டு சீர்குலைக்கும் வகையிலும் கல்லூரி கல்வி இயக்குனர் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆர்.மோகன் என்பவரை கல்லூரி முதல்வராக நியமித்து பேராயர் உத்தரவிட்டார் (அதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது). ஆனால் அதற்கு முன்பே நவ. 30-ல் ஓய்வுபெற்ற சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார், அமெரிக்கன் கல்லூரி நிர்வாகக்குழு விதிகளின் அடிப்படையில் துணைமுதல்வராக இருந்த அன்புதுறையிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். டிச. 6-ம் தேதி நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று தனியார் கல்லூரிகள் விதிமுறைப்படி இதுதொடர்பான ஆவணங்களும் கல்லூரி கல்வி இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பான பதில், சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமாருக்கு அணுப்புவதற்கு முன்பே பேராயர் தரப்புக்கு கல்லூரி கல்வி இயக்குனர் அனுப்பியுள்ளார். ஆட்சிமன்றக் குழு ஒப்புதல் பெற்று முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் கடிதம் அனுப்பவில்லை எனக்கூறி நிராகரித்த கல்லூரி இயக்குநரகம், பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் பரிந்துரையை மட்டும் ஏற்றுக்கொள்வது உள்நோக்கம் கொண்டதாகும்.
இது ஏற்கெனவே உள்ள நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்பாடாகும்
. பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் தரப்பிலிருந்து ஆதாயம் பெற்று கல்லூரி கல்வி இயக்குனர் செயல்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. எனவே இது குறித்து தகுந்த விசாரணை நடத்தவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: