EMBLEM

EMBLEM

Saturday, June 30, 2012

A Letter to Dr. P.P.Chelladurai...


மதிப்பிற்குரிய அய்யா செல்லத்துரை அவர்களுக்கு,
அமெரிக்கன் கல்லூரியின் ஆசிரியர் அலுவலர் பிரச்சனையின் இரு தரப்பு நியாயங்களை ஆய்ந்து சொல்லும் பொறுப்பு உங்களுக்கு மாடரேட்டர் அய்யாவால் கொடுக்கப்பட்டது. நீங்கள் கல்வித்துறையைச் சார்ந்தவர். அனுபவமிக்கவர். வயதில் மூத்தவர். நிதானமாகவும் பொறுப்பாகவும் இதைக் கையாள்வீர்கள் என்று மாடரேட்டர் நினைத்திருக்கக் கூடும். ஓராண்டுக்கும் மேலாக சம்பளமின்றி, எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தோடு காத்திருந்த ஊழியர்களும்கூட ஒரு மூத்த கிறித்துவர், நியாயத்தின் பக்கத்தில் நிற்பார் என நம்பியிருந்தனர். ஆனால் காலம்சென்ற பேராயர் மருமகன் தவமணிக்குத் துணை செய்யக்கூடிய வகையில் உங்கள் அறிக்கையை நாசூக்காக நகர்த்தியிருக்கிறீர்கள் என்பதை முட்டாள் கூட புரிந்துகொள்வான். தவமணி எழுதிய அறிக்கைதான் உங்கள் கையொப்பமிட்டு வந்திருக்கிறது என்றும் கூறுவதற்கும் நியாயமுண்டு.
நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் நீங்கள் கண்டறிந்த விசயம் ஒன்றுதான். அதாவது பழைய முதல்வர் சின்னராஜ் ஜோசப் இந்துக்களை அதிக அளவில் நியமித்த்தன் காரணமாக கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து சமநிலை போய்விடட்து. மோகனும், தவமணியும் மிக பொறுப்பாகச் செயல்படட்தில் இந்த சமநிலை காப்பாற்றப்பட்டுள்ளது. இது தொடரவேண்டும் என்பது உங்கள் நிலைப்பாடு.
இந்து/ கிறித்தவர் பட்டியல் எடுப்பதற்கு நீங்கள்  மேற்கொண்ட சிரமங்களோடு இன்னொரு பட்டியலையும் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தவமணியின் உறவினர்கள் புதிதாக எத்தனைபேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தவமணியின் சாதிக்கார்ர்கள் எத்தனை பேர் உள்ளே திணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கணக்குத்தான் அது. அதை நீங்கள் செய்யத்துணிய மாட்டீர்கள். அதற்கான காரணங்களையும் எங்களால் ஊகிக்க முடிகிறது.
நீங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, மோகனும் கிறிஸ்டோபர் தவமணியும் எப்போது முதல்வர் செயலராகச் செயல்பட்டார்கள்? முதல்வர் சின்னராஜையும், மோகன் மற்றும் தவமணியையும் ஒரே தட்டில் வைத்து , எல்லாப் பணி நியமனங்களையும் சம்மாகப் பார்க்கும் அவசியம் ஏன் வந்தது?
செல்லத்துரை சார். கல்வி நிறுவனங்களில் எந்த சாதி/ மதத்தைச் சார்ந்தவர் இருக்க வேண்டும் என்பதைவிட, என்ன தரத்திலானவர் இருக்கவேண்டும் என்பது உங்களுக்குப் பொருட்டாக படவில்லையா? அமெரிக்கன் கல்லூரி வரலாற்றில் எப்போதுமே, ஆசிரியர் எண்ணிக்கையில் கிறித்தவர்/ இந்து சம்மாக இருந்ததில்லை. அப்படி இருக்கவும் முடியாது. மூன்று விழுக்காடு கிறித்தவர்களில், சி.எஸ்.ஐ., கிறித்தவர்களில் ஆசிரியருக்கான முழுத்தகுதியோடு ஆசிரியர்கள் கிடைப்பது சாத்தியமில்லை.
 மேலும் கிறித்தவ சமுதாயத்திற்கு கல்லூரி பயன்படவேண்டும் என்பதுகிறித்தவ ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும்என்ற பொருளிலல்ல. நீங்களாகக் கற்பனை செய்யும் இந்தக்கருத்துக்கு அமெரிக்கன் கல்லூரி ஸ்தாபகர்கள் கூறியதாக ஏதாவது ஒரு ஆதாரத்தையாவது காட்டமுடியுமா? ‘To give liberal Christian higher education to all creeds of society என்பதுதான் அமெரிக்கன் கல்லூரியின் நெற்றியில் எழுதப்பட்டுள்ள வாசகம். சிறுபாண்மை நலன் என்பது கிறித்தவ மாணவர்கள் 50% பயில்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான். மேலும் தரமான ஆசிரியர்கள்தானே தரமான கல்வியைக் கொடுக்க முடியும். இந்த ‘மாதிரி தானே (model) அமெரிக்கன் கல்லூரியை முன்மாதிரியான கல்லூரியாக இருத்தியிருக்கிறது. இதில் தங்களுக்கு என்ன குழப்பம்? சொல்லப்போனால் அமெரிக்கன் கல்லூரி ‘மாதிரியை திருச்சபை முழுவதும் பயன்படுத்தியிருந்தால் ஆயிரக்கணக்கில் நம் கல்வி நிறுவனங்கள் பெருகி, உங்கள் கனவான கிறித்தவர்கள் எல்லாம் வேலையும் பெற்றிருப்பார்கள்.
இன்றைக்கு மதுரையில் நம் பள்ளிகளின் நிலை என்ன? உங்கள் பேரன் பேத்திகளை படிக்கும் பள்ளிகள் எவை? மிகப்பிரமாதமான வளாகங்கள். அருமையான கட்டிடங்கள். ஏன் நம் கிறித்தவ நிறுவனங்களில் தேர்ச்சி விகிதமில்லை? என்ன பிரச்சனை? ஒரு மூத்த கல்வியாளராக இதைத்தான் நீங்கள் ஆராயவேண்டும்.
அய்யா! நேர்மையோடும் நடுநிலையோடு அணுகினால் அமெரிக்கன் கல்லூரிப்பிரச்சனை மிக எளிமையானது. முறையான முதல்வரால்,  பணியிலமர்த்தப்பட்ட ஊழியர்கள் விரட்டப்பட்டு வேலையின்றி நிற்கிறார்கள். முதல்வர் செயலர் அங்கீகாரம் அற்ற தவமணியார், எவ்வித விதிகளையும் பின்பற்றாமல் நியமித்தவர்கள் கல்விச்சூழலை நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் இந்து - கிறித்தவர் பிரச்சனை எங்கு வந்தது? இந்த இரு தரப்பு ஆசிரியர்களின் தகுதிகளை சோதித்துப்பார்க்க தாங்கள் தயாரா?
இந்து- கிறித்தவ ஆராய்ச்சியை விட்டுவிட்டு நீங்கள் கவனம் செலுத்தவேண்டிய விசயங்கள் நிறையவே உண்டு.
மூன்று ஆண்டுகளாக முறையான முதல்வர் செயலர் இல்லாமல் கல்லூரி அடைந்த பின்னடைவுகள் என்ன?
பொய் வழக்குகள், ரவுடிக் கலாச்சாரம், ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகள், மாணவர்களுக்குள் நடந்த கோஷ்டி மோதல்கள் - இவற்றின் முன்னனி, பின்னனி என்ன?
கல்லூரியை நாசமாக்கிய ஒரு நபரை முதல்வரானால் இந்தக் கல்லூரியின் எதிர்காலம் என்ன?
தகுதியும், திறமையும் உடைய மூத்தவர்கள் பலர் இருக்க, உங்களைப் போன்றவர்கள் தகுதியற்ற ஒரு நபரைத் தாங்கிப்பிடிக்க முயல்வதேன்?
இப்படி ஆராய்வதற்கு நிறைய் இருக்கும்போது பிரச்சனையைத் திசை திருப்பும் வகையில் இந்து கிறித்தவ கண்டுபிடிப்பை நிகழ்த்துவது தங்களைப் போன்ற மூத்த கிறித்தவ கல்வியாளர்க்கு அழகா?
இவ்வண்,
பேராசிரியர் வின்ப்ரட் தாமஸ்
பேராசிரியர் பிரபாகர்
அமெரிக்கன் கல்லூரி ஆட்சிமன்றக்குழு பாதுகாப்பு மன்றம்.

No comments: