***
இளங்கோ கல்லானை நமது பழைய ஆங்கிலத்துறை மாணவர். அவரது கட்டுரை இவ்வார தமிழினி என்ற மாதாந்திர கலை இதழில் வெளிவந்துள்ளது. அதனை இங்கே தருகிறோம். ....
தமிழினி
மாதாந்திர கலை இதழ்
ஜூலை – ஆகஸ்ட் 2011
அமெரிக்கன் கல்லூரி:அதிகார வர்க்கத்தின் கள்ள மௌனம்
இளங்கோ கல்லானை | கல்விஅமெரிக்கன் கல்லூரியில் படித்த அனுபவத்தை என்னைப் பொறுத்த அளவில் இலக்கியமாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அரசியலாக எழுதும்படி ஆகிவிட்டது. பதினேழாவது வயது வரை எல்லோரும் என்னை ‘வாடா போடா’ என்றனர். அனேகமாக அனைத்து நிறுவனங்களிலும் கல்விக்காகவும் ஒழுக்கத்திற்காகவும் நான் துரத்தப்பட்டேன். நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று எண்ணி படிப்பை விட்டுவிட்டு ஏதாவது கடையில் வேலைக்குச் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்து அதை வீட்டிலும் தெரிவித்துவிட்டேன். ஏதாவது தொழில் செய்து பழகினால் பிழைத்துக் கொள்ளலாம் என்று உறுதியாக நம்பினேன். நமது கல்வி அமைப்புகளும், சமூக எதிர்பார்ப்புகளும் நையப் புடைத்து அனுப்பிய லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். மாணவனை அவமானப்படுத்துவதன் மூலமும் இம்சிப்பதன் மூலமும் அடையவேண்டிய இலக்கை அவன் அடையச் செய்யலாம் என்பது நமது கல்விக்கொள்கை.
ஊழை நம்பக் காரணமாக அமைந்தது மேனிலைக் கல்வித் தேர்வின் முடிவுகள். ஒரு காலத்தில் நன்றாகப் படித்த நான், அன்று தேறிவிட்டதற்கே ஆச்சரியப்பட்டேன். எனக்கு அப்போது முடிவுகள் எடுக்கும் பக்குவம் எல்லாம் இல்லை. என்னோடு படித்த மாணவன் அதிக மதிப்பெண்களுடன் தேறிவிட்டதால் நல்ல கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்க என்னையும் உடன் அழைத்துச் சென்றான். அமெரிக்கன் கல்லூரியை வெளியில் இருந்தே பார்த்த எனக்கு, அதன் ஒழுங்கும் அழகும் நிம்மதியைத் தந்தது. ஒரு விண்ணப்பத்தின் விலை இருபது ருபாய் என்று வரிசையில் நின்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். என்னை வரிசையில் நிற்க வைத்து விட்டு நண்பன் கல்லூரியில் எந்தப் பாடத்தில் சேர்ந்தால் வேலை கிடைக்கும் என்பதை விசாரிக்கச் சென்று விட்டான். எனக்கும் அந்தக் கல்லூரியைப் பார்த்ததும் மீண்டும் படிக்கும் ஆர்வம் லேசாக மின்னியது. ஆனாலும் கூச்சம். நம்மைப் போல உள்ள மாணவர்களை இங்கு சேர்ப்பார்களா என்று. ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் மாதிரி உள்ளதே என்று சுற்றும்முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தேன். சரி இங்கே சேர முடியாவிட்டாலும் ஒரு விண்ணப்பம் வாங்கிக் கொள்வோம் என்று எண்ணினேன். அதற்காவது நமக்கு உரிமை உள்ளதல்லவா? தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான மதிப்பெண்கள். எனது முறை வந்ததும் நண்பனும் வந்து சேர்ந்தான். அவன் ஏதோ அறிவியல் துறைக்கு வாங்கினான் என்று நினைவு. நான் ஆங்கிலம் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு விண்ணப்பம் வாங்கினேன்.
இரண்டாவது பட்டியலில் எனக்கு ஆங்கிலத்திற்கு இடம் கிடைத்தது. வீட்டில் மருத்துவனாகவும் முடியவில்லை, பொறியியலாளனாகவும் முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. கல்லூரியில் நுழைந்த முதல் நாளில் வருகைப் பதிவேட்டை வாசிக்கும் போது என்னுடைய துறைத் தலைவர் திரு சாமுவேல் லாரன்ஸ், Mr.இளங்கோ என்று என்னை அழைத்ததைப் போலவே எல்லா மாணவர்களையும் மிஸ்டர் போட்டே அழைத்தார். எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆம், இப்படித்தான் கல்வி ஒரு ஜனநாயக அமைப்பாக இருப்பதைக் காண முடிந்தது. (பாடத் திட்டங்களைத் தேர்வு செய்யும்போது மாணவர்களையும் கலந்தாலோசிக்கும் அகடமிக் கௌன்சில்களில் நானே மூன்றாண்டுகள் உறுப்பினனாக இருந்துள்ளேன்.) முதல் நாளே நூறு வருடத்துக்கும் மேலாக நின்றுகொண்டிருக்கும் ஒரு பெரிய அறிவு, சமத்துவப் பாரம்பரியத்தின் நிழலில் வந்து இளைப்பாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். ஆசிரியர் மாணவர் உறவென்பது எப்போதுமே மேல் கீழ் என்ற தளத்தில் கிடையாது. ஒரு ஆசிரியர் சொன்னார், “நான் ஆசிரியராய் இருப்பதும் நீங்கள் மாணவராய் இருப்பதும் ஒரு தற்செயல் மட்டுமே. மற்றபடி நமக்குள் பேதம் ஏதும் கிடையாது’ என்று. நூறு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு கல்லூரி தன்னுடைய துவங்கப்பட்டதன் நோக்கத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்ற ஆச்சரியம் எனக்குள் தொடர்ந்தது. ஆம், அமெரிக்கன் கல்லூரி என்பதை என்னைப் பொறுத்தவரை ஒரு சமத்துவக் கோயிலாகவே கண்டுவந்துள்ளேன். முதல் தலைமுறையினர் கல்வி கற்க முனைந்தால் அவர்களுக்கே முன்னுரிமை என்று ஒரு கல்வி நிறுவனம் செயல்பட்டால் அதைச் சமத்துவக் கோவில் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது! எந்த நேரத்திலும் உணர்ச்சிவசப்படாமல் என்னால் நினைவுகூர முடியாத நினைவு அமெரிக்கன் கல்லூரி. என்னுடைய சிறுமைகளைப் பரிசோதித்துக் கொள்ளவும் என்னுடைய திறன்களைக் கண்டடையவும் முழுக்க முழுக்க அமெரிக்கன் கல்லூரி மட்டுமே காரணமாக இருந்தது. என்னைப் போல பல மாணவர்களும் இதே நன்றியுடன் உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பண்பாட்டு இயக்கமாக மதுரையின் மையத்தில் இயங்கி வரும் அமெரிக்கன் கல்லூரிக்குள் இன்று வெளியில் உள்ள அரசியல் புகுந்து விட்டதன் அவலம். அரசின் ஓட்டுப் பொறுக்கி மௌனம் நம்மைக் கோபம் கொள்ளச் செய்வது. அதைவிட பிரச்சனைகளின் வாய்ப்பைப் பயன்படுத்தி நன்கு சம்பாதிக்கும் அதிகார வர்க்கம், பிணங்களில் கூட சில்லறை தேடும் மனசாட்சியற்ற மாக்களை எண்ணும்போது இன்னும் அதிக வருத்தம் அளிக்கிறது.
இப்பொழுது உள்ள நில அபகரிப்பு மற்றும் வியாபார கபளீகரச் சூழல் உயர் கல்வி நிறுவனங்களைத்தான் மிகவும் பாதித்துள்ளது. தென்மாவட்டக் கல்லூரிகளில் பல சமுதாயக் கல்லூரிகள் சில மாநில முன்னாள் மந்திரிகளால் மிரட்டி வாங்கப்பட்டுள்ளன. மதுரை தியாகராயர் கல்லூரி, கோவை பி எஸ் ஜி கல்லூரி போன்றவை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியபோது யாருக்கும் உள்ளே உள்ள மிரட்டல்களும் கல்லூரி அதிபர்கள் சந்தித்த இன்னல்களும் தெரியவில்லை. திண்டுக்கல்லில் இயங்கி வரும் G.T.N கல்லூரியை முழு விலைக்கு வாங்கியவர் இன்றைய மத்திய மந்திரிகளில் முக்கியமானவர். இதைப் பெற்றுக்கொடுத்தவர் தி மு க ஆட்சியின் மந்திரி. காங்கிரஸ் தி மு க வின் கொள்ளை ரீதியான கூட்டணி தொடரத்தான் செய்யும். நேற்று மதுரையில் ஒரு கல்லூரியின் அதிபர் வீட்டில் சிபிஐ ஏவப்படுகிறது. காரணம் அந்தக் கல்லூரியை விழுங்க நினைத்த மத்திய மந்திரி தனது மற்றத் தொழில் முதலீடுகளைத் திரும்பப் பெற கல்வி நிறுவனங்களைக் காவு கேட்கிறார். தரவில்லை என்றால் அடுத்து சிபிஐ தான். மந்திரிகள் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார்கள். எவ்வளவு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது கல்வி நிறுவனங்களையும் நிலங்களையும் தோது போட்டு அபகரிக்கிறார்கள் என்று பார்த்தால் பயம் அடி வயிற்றைப் புரட்டுகிறது. ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பித்தவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார், சொத்துகளைப் பாதுகாக்க. ஒரு அரசியல்வாதியின் அடியாள் கல்வி சாம்ராஜ்யம் கண்டு மிக வளமாக இருக்கிறார். இனப்படுகொலைக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு கல்லூரி சொந்தம். எங்கள் பகுதியின் கல் குவாரி அதிபர் தினமும் ஐம்பது ஏக்கர் பதிவு செய்துவிட்டு தான் தூங்கப் போவார். அடக்கமுடியாத பசி. பணம் பணம்… கருப்பு வெள்ளை… சீட்டுக் கட்டு என்று கொழிக்கிறார்கள்! கல்வி மூலமாக மேலே வர வேண்டும் என்று நினைக்கும் மத்திய வர்க்கம் கையறு நிலையில் உள்ளது.
கிறிஸ்துவ மிசனரிகளின் கல்வி நிறுவனங்கள் பொதுவாக நகர்களின் மையப்பகுதியில் அமைந்துள்ளன . அவற்றை வளைக்கும் பொருட்டு அரசியல், மதக் கூட்டணி உருவாகிறது. பேராயரைக் கேள்வி கேட்டால் கிறிஸ்துவைக் கேள்வி கேட்பதற்குச் சமம். எப்படிக் கேட்பார்கள்? மதப்பற்று வீங்கி வீங்கி கல்வி கற்க வேண்டிய மண்டை உறைந்துபோனது கிறிஸ்துவர்களுக்கு. இன்று கேட்பாரற்று சொத்துக்களை விற்கும் ஏகபோக உரிமை உள்ளவர்களாக வளம் வருகிறார்கள் CSI பேராயர்கள். மதுரை கிறிஸ்துவ மிசன் மருத்துவமனை இன்று வெளியே வணிக வளாகமானதும் உள்ளே குட்டிச்சுவரானதும் இவர்களால் தான். ஒரு தகவல். கருணாநிதிக்கு அருகில் நின்று சிறுபான்மைத் தோள் கொடுக்கும் எஸ் ரா சற்குணம் தான் மதுரைப் பேராயரின் கசின் (தமிழில் வார்த்தை இல்லை- மன்னிக்கவும் வாசகர்களே.) கிறிஸ்துவப் பதங்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் சமூக மாற்றத்தை விட ஏசுவுக்குள் எப்படி ஐக்கியமாவது என்பதைப் பற்றி படிக்கக் கிளம்பி விட்டார்கள். அதற்குத்தான் பேராயர் தேர்தல்கள் நடத்துகிறார்கள். தி.மு.க மாவட்டச் செயலாளரை விட CSI முக்கியப் பிரமுகரின் பிறந்த நாள் விழாவிற்கு அதிகப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பேராயர் தேர்தலில் வெற்றி பெற ஒரு மாநிலக் கட்சி அளவிற்குச் செலவழித்து அதைவிட அதிகம் ரௌடித்தனம் செய்ய வேண்டியுள்ளது. கோவைப் பேராயர் மீது எட்டு கிரிமினல் வழக்குகள் உள்ளன. பிணையில் வந்து இறைப்பணி செய்கிறார். எத்தனை மார்டின் லூதர்கள் வந்தாலும் சீர்திருத்தமுடியாத கிறிஸ்துவம் CSI கிறிஸ்துவம் தான். தூத்துக்குடியில் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரியும் என் நண்பன் சொல்கிறான், ஆசிரியை வேலை வாங்கித் தருகிறேன் என்று பாதிரியார்கள் படித்த பெண்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று.
திருச்சபைகளின் ஒழுங்கீனங்களை மெளனமாக வேடிக்கை பார்ப்பதுதான் மதச் சார்பின்மையோ? குடிமைச் சமூகத்துக்கு கட்டுப்படாத அளவிற்குப் போகிறார்கள். அரசுக்கும் அரசியல் வாதிகளுக்கும் என்ன விசேசமான பயம் வேண்டியுள்ளது? அரசாங்கமும் பொதுமக்களும் கொடுக்கும் வரிப் பணத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளன. அமெரிக்கன் கல்லூரிக்கு இடம் கொடுத்தவர்களில் முஸ்லீம்களும் இந்துக்களும் உள்ளனர். அதன் அடையாளங்களை அமெரிக்கன் கல்லூரியின் சேப்பல் கூட சொல்கிறது. வழிபடும் இடத்திலேயே சர்வ மதங்களின் அடையாளங்களையும் கொண்டுள்ளது அமெரிக்கன் கல்லூரி. இந்த உயரிய நோக்கங்கள் பற்றித் தெரியாதது போல நடிக்கும் இந்தத் தடித்தனத்தை எப்படி எதிர்கொள்வது? அப்படி அடங்காதபட்சத்தில் கல்லூரியை அரசாங்கம் எடுத்து நடத்தப் போதுமான அளவிற்கு சாதகமான அம்சமே இருக்கிறது.
அமெரிக்கன் கல்லூரி என்பது துவக்கப்பட்ட காலத்தில் இருந்தே ஆட்சி மன்றக் குழுவால் நிர்வாகிக்கப்பட்டு வரும் அமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனம். அதன் முதல் நோக்கமாக வைப்பது, தரமான சுதந்திரக் கிறிஸ்துவக் கல்வியை அனைவருக்கும் வழங்குவது என்பதுதான். இங்கே கிறிஸ்துவம் என்பது மத அடையாளமாகக் கொள்ளப்படத் தேவையில்லை. காரணம் போஸ்டன் மிசனரிகள் தங்கள் குறிப்புகளில் மத மாற்றத்தைத் தங்கள் நோக்கமாகக் கூறவில்லை, அல்லது கல்வியில் மதப்போதனையை கலக்கவேண்டும் என்று முழங்கவும் இல்லை. அமெரிக்க மிசனரிகளின் இந்தக் கொள்கையில் இன்னொரு சிறப்புப் பிரிவும் உண்டு. அதாவது, முதல் தலைமுறையாகக் கல்வி கற்க விரும்புபவர்களுக்கு முன்னுரிமை என்பதுதான். நல்ல கல்லூரிகள் என்பவை பெரும்பாலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைச் சேர்த்து பின்பு அவர்களின் வெற்றியைத் தனதாகக் கொண்டாடுவதுதான். ஆனால் அமெரிக்கன் கல்லூரி தென்தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களைத் தன்னுள் இழுத்தது. கல்விச் சேவையில் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தது. இந்தப் பின்னணியில் இந்து அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் மதுரையில் கல்விப் பணியில், போட்டியில் பின்தங்கிவிடக் கூடாது என்ற நோக்கில் கல்வி நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். காட்டாக, நான்காம் தமிழ் சங்கம் என்று அழைக்கப்படும் செந்தமிழ் கல்லூரியின் தீர்மானத்தில் இவ்வாறாகச் சொல்கிறார்கள்- `வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் கல்வியின் மூலமாக நம்மை வென்று விடுவார்கள். எனவே, தமிழ் ஆர்வலர்கள் கல்வி நிலையங்களைத் தொடங்க வேண்டும்’ என்று ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார்கள். இதே காலகட்டத்தில் மன்னர் சேதுபதியால் சேதுபதி பள்ளி துவங்கப்படுகிறது. மதுரைக் கல்லூரியும், தியாகராயர் கல்லூரியும் துவங்கப்படுகின்றன. சில சமூக அமைப்புகள் இலவச உணவுடன் கூடிய உறைவிடப் பள்ளிகளையும் துவக்கின. எப்படிப் பார்த்தாலும் மதுரையின் கல்வி, கல்விப் போட்டி, அதன் தரத்தின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக அமெரிக்கன் கல்லூரி இருந்தது என்பதுதான் உண்மை.
சுதந்திரம் பெற்ற பின்பும் சில அமெரிக்கப் பேராசிரியர்களும் முதல்வர்களும் அமெரிக்கன் கல்லூரியில் பணி புரிந்தனர். அப்பொழுது ஆட்சி மன்றக் குழுவைக் கூட்டி முடிவுகளை எடுத்துக் கொள்வார்கள். அதன்படி முதல்வர் மற்றும் செயலர் பதவியில் உள்ளவருக்கே அனைத்து அதிகாரங்களும் என்பதுதான் விதி. அன்று சமூகப் பொறுப்பில் உள்ள மனிதர்களை ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினராக்குவதும் உண்டு. இந்தப் பின்னணியில் தான் மதுரை ராமநாதபுர தென்னிந்திய கிறிஸ்துவ திருச்சபைகளின் பேராயரை உறுப்பினராக ஏற்றுக்கொண்டது ஆட்சி மன்றக் குழு. இதன் பின்பு இந்திய முதல்வர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்தப் பின்னணியில் உறுப்பினர்களின் சுழற்சி முறையில் ஆட்சி மன்றக் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பை மொத்தமாக பேராயருக்கே பட்டா போட்டு கொடுத்து கொடுக்கத் துவங்கினார்கள். அதற்குக் காரணம் கல்லூரிக்கு கிடைக்கும் சிறுபான்மை அந்தஸ்து என்பது வாதம். முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இன்றுவரை சட்டப்படி கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலாளருக்கே உண்டு. ஆனால் கல்லூரியின் ஏனைய முடிவுகளில் தலையிடும் அதிகாரத்தை பேராயருக்குக் கொடுக்கவில்லை. இன்று வந்துள்ள பேராயரோ இணையத் தளத்தில் தன்னைக் கல்லூரியின் தாளாளர் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். இதை நீதிமன்றத்தில் சொன்னால், புதிய ஆட்சியில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் வாழ்க்கை முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும். சட்டப்படி எந்த உரிமையும் கோர முடியாத இந்தப் பேராயர் எந்தப் பணிமூப்பும் இல்லாத தனது மருமகனைக் கல்லூரியின் காசாளராக நியமிக்க அன்று முதல்வர் பொறுப்பு ஏற்கும் சின்னராஜ் ஜோசப் என்பவருடன் ஒரு எழுதாத ஒப்பந்தம் செய்து கொள்கிறார். (அதென்னவோ தெரியவில்லை, மருமகன்களுக்கும் கல்வி நிறுவனங்களைச் சீர் குலைப்பதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஆம், கடந்த ஆட்சியில் மூன்று துணைவேந்தர்கள் ஆள்பவர்களின் மருமகன்கள்.) கல்லூரி நிலத்தை மதுரையின் அரசியல் ரௌடிகளின் விருப்பத்திற்கேற்ப விற்க முடிவு செய்கிறார். வணிக வளாகம் கட்ட நடந்த பேர ஆவணங்கள் வெளிவந்த பின்பும் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்கிறார் இந்தப் பேராயர்.
இரண்டாயிரத்து எட்டில் துவங்கிய இந்தப் போராட்டம் எல்லையில்லாமல் சென்று கொண்டு உள்ளது. மதுரை செல்லும் எவரும் இந்தக் கல்லூரி வளாகத்தைப் பார்த்தால் ஆசைப்படத்தான் செய்வார்கள். அப்படி ‘பெரிய குடும்பத்தவர்கள்’ ஆசைப்பட்டதன் பாதகம் அதற்குத் தரகராக செயல்பட்டவர்களால் இன்று ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஆசிரியர்களை அழைத்து விபரத்தை விளக்குகிறார். இந்த சமயத்தில் ஒரு போலி ஆட்சி மன்றக் குழுவைக் கூட்டி முதல்வரை நீக்கம் செய்கிறார் பேராயர். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் குதிக்கிறார்கள். போராட்டத்தை ஒடுக்க மாநகராட்சியின் முக்கியப் பதவியில் இருக்கும் ஒரு ரௌடியின் துணையோடு போலீஸ் அத்துமீறல் செய்து ஜார்ஜ் செல்வகுமார் என்பவரை முதல்வராக நியமிக்கிறார்கள். மாணவர்களை ரௌடிகளை வைத்து மூன்று முறை நையப் புடைக்கிறார்கள். அடக்க அடக்கத் திமிறிவரும் என்பது தெரியாமல் அந்த ரௌடிகள் மீண்டும் மீண்டும் அடக்கு முறைகளைச் செய்கிறார்கள். மாணவிகளின் புகாரின் அடிப்படையில் அன்றைய கமிசனர் மகளிர் ஆணையத்தால் கடுமையாகச் சாடப்படுகிறார். அவருக்கு இடைக்காலப் பணிநீக்கமும் கிடைக்கிறது. சென்ற ஆட்சியில் இருந்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் லட்சணம் அனைவரும் அறிந்ததே. மீண்டும் மீண்டும் போராட்டங்கள். இன்றும் ஒரு பிரிவினர் வகுப்புகளுக்கு வெளியேயும் மற்றொரு பிரிவினர் உள்ளேயும் வைத்து வகுப்புகளை எடுக்கிறார்கள். சாலமன் பாப்பையா போன்றவர்கள் கல்லூரியைக் காப்பாற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்தார்கள். ஆனால் முதல்வர் செய்த ஒரு தவறு, ஒரு குற்றவியல் வழக்கைக் கூட அந்தப் பேராயர் மேல் பதியாததுதான். அவர் இன்றும் நீதிமன்றங்களில் தன் மருமகன் மூலமாகத்தான் தனது அரசியலை வழக்காக நடத்துகிறார். நீதிமன்றம் ஏற்கனவே சொரணை வரும் அளவு கண்டித்தும் அனைத்தும் தனக்கே சொந்தம் என்று கூறி வருகிறார்.
குடிமையியல் வழக்குகளில் தீர்ப்பு வர நாளாகும். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகி விட்டது. இவ்வளவுக்கும் பின்பு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவதில் சிறுபான்மை அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை. ஒரு கல்வி இயக்குனருக்கோ இணை இயக்குனருக்கோ சட்டப்படி உள்ளதை நடைமுறைப் படுத்துவதில் என்ன சிக்கல்? ஒரு மாவட்ட வருவாய் அதிகாரியோ அல்லது நீதிமன்றமோ ஏன் எதையுமே சிக்கலாக்கி விடுகிறார்கள் என்பது புரியவில்லை. ஆம், ஆவணங்களைப் படிக்கக் கூட முடியாத அதிகாரிகள், நீதிபதிகள் தான் நமது தேசத்தின் சொத்து. மேலிடம் சொல்ல வேண்டும் என்று கீழிடமும் கீழிடம் கொடுக்கும் அறிக்கை வேண்டும் என்று மேலிடமும் மாற்றி மாற்றி பந்தாடுவதுதான் நமது நிர்வாகத்தின் தனிச் சிறப்பு. லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்து அரசியல்வாதிகளின் அன்பிற்கு ஆளாகும் நமது அதிகார வர்க்கத்தின் சிந்தனைத் திறன் மெய்சிலிர்க்க வைக்கிறது. இதற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் விதிவிலக்கல்ல. இந்தத் திருச்சபைக் கூட்டமோ சமூகநீதியைத் தங்கள் குலநீதியாக பாவித்து ஒரு கல்லூரியை சிதைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. நாடார் X தலித் சாதி அரசியலால் ஆசிரியர்கள், அலுவலர்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளார்கள். இது தவிர பணி புரியும் ஆசிரியர்களின் மனைவிமார்கள் திருச்சபை நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். அவர்களை மிரட்டி தனக்கும் ஒரு ஆசிரியர் குழுவை உருவாக்கி வைத்துள்ளார் பேராயர். இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத அரசின் நோக்கம் சந்தேகத்திற்குரியது. இப்பொழுது இந்தக் கல்லூரியின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கல்லூரியைக் காப்பாற்ற நினைப்பவர்களோ பிரார்த்தனைக் கூடங்களில் அழுது அரற்றி அல்லேலூயா பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் கல்லூரியை அபகரிக்க வரும் ஒரு குழுவிடம் மாணவர்கள் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும்? போராட நரம்பில்லாதவர்களாய் இருக்க முடியுமா? இல்லை அவர்கள் காலம் முழுவதும் போராட வேண்டுமா? ஆனால் பெற்றோர்களும் மாணவர்களும் சமூகப்பொறுப்பில்லாமல் நான் பணம் கட்டியுள்ளேன் எனக்கு காரியம் நடக்க வேண்டும் என்கிறார்கள். இந்த இழிவு சுயநிதிக் கல்லூரிகளின் வளர்ச்சிக்குப் பின்பு ஏற்பட்டது. என் அப்பா கல்லூரியில் படித்த காலத்தில் ராஜாஜியையும் நேருவையும் ஈ வே கி சம்பத்தையும் நிற்க வைத்து கேள்வி கேட்ட அரசியல் பொறுப்புணர்ச்சி இருந்தது. நான் படிக்கும் காலத்தில் இருபது பைசா பஸ் கட்டண உயர்வுக்கு சண்டை போட்டோம். நூறு ரூபாய் கட்டண ஏற்றத்துக்கு கல்லூரி முதல்வரிடம் கணக்குக் கேட்டோம். அவரும் ஒலிபெருக்கியில் பைசா வாரியாக கணக்கு சொன்னார். இன்று கல்லூரியின் பாரம்பரியம் தெரியாமல் உண்ணாவிரதம் நடத்தும் மாணவர்களுக்குப் போட்டியாக உண்ணும்விரதம் நடத்தும் பண்பாளர்களாக மாணவர்கள் உள்ளனர். அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது. காமிரா முன்பாக ஆசிரியர்களை தேவிடியாமகன் என்று முழங்கும் அரசியல் சிந்தனையும் தெளிவும் அடியாழம் வரை தெரிகிறது. மாணவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள முடியாத பொழுது எப்படி தன்னை நம்பி வருபர்களை காப்பாற்றுவார்கள்? அப்படி என்ன உப்பு உரைப்பில்லாத பயிற்சிதான் கல்வியா? அப்படி என்னதான் பெற்றோர்கள் சம்பாத்தியத்தின் மீது மட்டுமே கண்ணாக உள்ளார்களோ தெரியவில்லை. நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் எங்களுக்கு இருந்த ரௌடி என்ற பட்டப் பெயர் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. கூடப் படிக்கும் பொம்பளப்பிள்ளைகிட்ட நல்ல பெயர் வாங்கி என்ன செய்வது? மாணவர்கள் தங்கள் உரிமைக்கு போராடத் தெரியாதபோது என்ன செய்யப் போகிறார்கள் என்றே தெரியவில்லை. எனக்கு பரீட்சை நடத்து, சான்றிதழ் கொடு என்பதோடு மாணவர்கள் தங்கள் கடமை முடிந்ததாகக் கருதுகிறார்கள்.
சாதிசனத் தூய்மையைப் பேணும் ஆசிரியர் குழுவை உருவாக்க கிறிஸ்துவ நிறுவனங்கள் முனைந்தால் அது எவ்வளவு பாதகமாக முடியும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதும் இல்லை. அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்களின் அரசியல் தாங்காமல் ஓடக் கூடிய சூழலே இருக்கிறது. இவற்றையும் மீறி ஒன்றிரண்டு நல்லாசிரியர்களும் மத அரசியலுக்கு எதிர்ப்புக் கூட தெரிவிக்க முடியாமல் புழுங்குகிறார்கள். சு. வேணுகோபால் போன்ற தமிழின் தலைசிறந்த ஒரு இலக்கியவாதியை அமெரிக்கன் கல்லூரி ஒரு ஆசிரியராய்க் கூடத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், இந்த ஜாதி மத அரசியல் தவிர காரணம் என்ன இருக்க முடியும்? இன்று ஜனநாயகம் பேசும், கல்லூரியைக் காப்பாற்றுவேன் என்று சூளுரைக்கும் சின்னராஜ் ஜோசப் பல திறமையாளர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியவர் என்பதை நாம் நினைவில் கொண்டாக வேண்டும். தீர்ப்புகள் நன்றாக அமைய வேண்டுமானால் நாம் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் இவர்களின் போலி மத வேஷம் இந்தக் கல்லூரியை எந்த முன்னேற்றப் பாதையிலும் அழைத்துச் செல்லாது.
கல்லூரியின் ஆசிரியர்கள் திறமையானவர்களாய் இருப்பது முக்கியமே ஒழிய நாடாரா அல்லது தலித்தா ஏன் கிறிஸ்தவரா என்பதெல்லாம் முக்கியமில்லை. ஏற்பட்டிருக்கும் சோர்விற்கும் தொய்விற்கும் அரசும் மாவட்டக் கல்வி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும். அரசியலில் ஆடியவர்களை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். முதல்வர் நேரடியாகத் தலையிட்டு தன்னுடைய தைரியத்தை வெளிப்படுத்த இது நல்ல சந்தர்ப்பம். மாணவர்களைக் காப்பாற்றும் பொறுப்புக்கும் ஒரு அருமையான சவால். செய்வாரா?
***
ஊழை நம்பக் காரணமாக அமைந்தது மேனிலைக் கல்வித் தேர்வின் முடிவுகள். ஒரு காலத்தில் நன்றாகப் படித்த நான், அன்று தேறிவிட்டதற்கே ஆச்சரியப்பட்டேன். எனக்கு அப்போது முடிவுகள் எடுக்கும் பக்குவம் எல்லாம் இல்லை. என்னோடு படித்த மாணவன் அதிக மதிப்பெண்களுடன் தேறிவிட்டதால் நல்ல கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்க என்னையும் உடன் அழைத்துச் சென்றான். அமெரிக்கன் கல்லூரியை வெளியில் இருந்தே பார்த்த எனக்கு, அதன் ஒழுங்கும் அழகும் நிம்மதியைத் தந்தது. ஒரு விண்ணப்பத்தின் விலை இருபது ருபாய் என்று வரிசையில் நின்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். என்னை வரிசையில் நிற்க வைத்து விட்டு நண்பன் கல்லூரியில் எந்தப் பாடத்தில் சேர்ந்தால் வேலை கிடைக்கும் என்பதை விசாரிக்கச் சென்று விட்டான். எனக்கும் அந்தக் கல்லூரியைப் பார்த்ததும் மீண்டும் படிக்கும் ஆர்வம் லேசாக மின்னியது. ஆனாலும் கூச்சம். நம்மைப் போல உள்ள மாணவர்களை இங்கு சேர்ப்பார்களா என்று. ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் மாதிரி உள்ளதே என்று சுற்றும்முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தேன். சரி இங்கே சேர முடியாவிட்டாலும் ஒரு விண்ணப்பம் வாங்கிக் கொள்வோம் என்று எண்ணினேன். அதற்காவது நமக்கு உரிமை உள்ளதல்லவா? தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான மதிப்பெண்கள். எனது முறை வந்ததும் நண்பனும் வந்து சேர்ந்தான். அவன் ஏதோ அறிவியல் துறைக்கு வாங்கினான் என்று நினைவு. நான் ஆங்கிலம் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு விண்ணப்பம் வாங்கினேன்.
இரண்டாவது பட்டியலில் எனக்கு ஆங்கிலத்திற்கு இடம் கிடைத்தது. வீட்டில் மருத்துவனாகவும் முடியவில்லை, பொறியியலாளனாகவும் முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. கல்லூரியில் நுழைந்த முதல் நாளில் வருகைப் பதிவேட்டை வாசிக்கும் போது என்னுடைய துறைத் தலைவர் திரு சாமுவேல் லாரன்ஸ், Mr.இளங்கோ என்று என்னை அழைத்ததைப் போலவே எல்லா மாணவர்களையும் மிஸ்டர் போட்டே அழைத்தார். எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆம், இப்படித்தான் கல்வி ஒரு ஜனநாயக அமைப்பாக இருப்பதைக் காண முடிந்தது. (பாடத் திட்டங்களைத் தேர்வு செய்யும்போது மாணவர்களையும் கலந்தாலோசிக்கும் அகடமிக் கௌன்சில்களில் நானே மூன்றாண்டுகள் உறுப்பினனாக இருந்துள்ளேன்.) முதல் நாளே நூறு வருடத்துக்கும் மேலாக நின்றுகொண்டிருக்கும் ஒரு பெரிய அறிவு, சமத்துவப் பாரம்பரியத்தின் நிழலில் வந்து இளைப்பாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். ஆசிரியர் மாணவர் உறவென்பது எப்போதுமே மேல் கீழ் என்ற தளத்தில் கிடையாது. ஒரு ஆசிரியர் சொன்னார், “நான் ஆசிரியராய் இருப்பதும் நீங்கள் மாணவராய் இருப்பதும் ஒரு தற்செயல் மட்டுமே. மற்றபடி நமக்குள் பேதம் ஏதும் கிடையாது’ என்று. நூறு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு கல்லூரி தன்னுடைய துவங்கப்பட்டதன் நோக்கத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்ற ஆச்சரியம் எனக்குள் தொடர்ந்தது. ஆம், அமெரிக்கன் கல்லூரி என்பதை என்னைப் பொறுத்தவரை ஒரு சமத்துவக் கோயிலாகவே கண்டுவந்துள்ளேன். முதல் தலைமுறையினர் கல்வி கற்க முனைந்தால் அவர்களுக்கே முன்னுரிமை என்று ஒரு கல்வி நிறுவனம் செயல்பட்டால் அதைச் சமத்துவக் கோவில் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது! எந்த நேரத்திலும் உணர்ச்சிவசப்படாமல் என்னால் நினைவுகூர முடியாத நினைவு அமெரிக்கன் கல்லூரி. என்னுடைய சிறுமைகளைப் பரிசோதித்துக் கொள்ளவும் என்னுடைய திறன்களைக் கண்டடையவும் முழுக்க முழுக்க அமெரிக்கன் கல்லூரி மட்டுமே காரணமாக இருந்தது. என்னைப் போல பல மாணவர்களும் இதே நன்றியுடன் உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பண்பாட்டு இயக்கமாக மதுரையின் மையத்தில் இயங்கி வரும் அமெரிக்கன் கல்லூரிக்குள் இன்று வெளியில் உள்ள அரசியல் புகுந்து விட்டதன் அவலம். அரசின் ஓட்டுப் பொறுக்கி மௌனம் நம்மைக் கோபம் கொள்ளச் செய்வது. அதைவிட பிரச்சனைகளின் வாய்ப்பைப் பயன்படுத்தி நன்கு சம்பாதிக்கும் அதிகார வர்க்கம், பிணங்களில் கூட சில்லறை தேடும் மனசாட்சியற்ற மாக்களை எண்ணும்போது இன்னும் அதிக வருத்தம் அளிக்கிறது.
அமெரிக்கன் கல்லூரியில் நடந்ததன் சுருக்கம்:
2008 இல் மதுரை இராமநாதபுர பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர், சினாட் என்ற தென்னிந்தியத் திருச்சபை அமைப்பின் தேர்தலில் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதைக் கொண்டாட கல்லூரி நிதியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று தன்னுடைய அடிபொடிகளை விட்டுக் கோரினார். மேலும் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை தனது கொண்டாட்டத்திற்கு பயன்படுத்தக் கோரிக்கை வைத்தார். இரண்டு கோரிக்கையுமே நிராகரிக்கப்படுகிறது. இன்னொரு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. ஆசிருடைய மருமகன் தனியார் செலுலார் நிறுவனங்களிடம் இருந்து கல்லூரி நிகழ்ச்சிகளுக்குப் பெற்ற நிதியை கணக்குக்குக் கொண்டுவராமல் மறைக்கிறார். தணிக்கையை ஒட்டி இப்படி ஒரு காரியத்தைச் செய்கிறார் கல்லூரியின் காசாளராக உள்ள இந்த மருமகன். இந்த மோசடியைக் கேள்வி கேட்ட முதல்வரை ஏக வசனத்தில் வசைபாடினாராம் தூய தேவ வாக்குக்கு சொந்தக்காரரான பேராயர். பாலியல் வழக்குகளைத் தொடுப்பேன் என்று கல்லூரி முதல்வரை மிரட்டினாராம் பேராயர். இதைத் தொடர்ந்து பேராயர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் CSI அல்லாதவர்களைத் தமிழ்த் துறையில் நியமித்ததைக் கேள்வி கேட்கிறார். மூன்று கோடி ரூபாய் உபரி இருந்த கல்லூரியின் நிதியில் ஒரே ஆண்டில் ஒன்றரைக் கோடி துண்டு விழுந்த நிதிநிலையைத் தாக்கல் செய்கிறார் பேராயரின் மருமகன். இது சம்பந்தமாக ஆசிரியர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. முதல்வர் ஹாங்காங் செல்லக் கோரியிருந்த விடுப்பை அறிந்து போலியான ஆட்சிமன்றக் குழுவை அமைத்து வேறு ஒரு முதல்வரை நியமிக்கப்பார்க்கிறார் ஆசிர். இதனைத் தொடர்ந்த மோதல்களில் கல்லூரிக் கோப்புக்களை வழக்கறிஞர்களிடம் கொடுத்து நிஜ ஆட்சி மன்றக் குழுவைக் கலைக்கும் வேலையில் இறங்குகின்றனர் மாப்பிள்ளையும் மாமனும். ஏப்ரல் பதினாறில் கல்லூரியைக் காப்பாற்ற சாலமன் பாப்பையா, முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எல்லோரும் களம் இறங்குகிறார்கள். இந்த மாமனும் மருமகனும் கிறிஸ்துவ அரசியலைப் பயன்படுத்தி கல்லூரியின் அமைப்பை மாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவக் கல்லூரி கிறிஸ்துவர்களுக்குத் தானே சொந்தம் என்பதுதான் இவர்கள் வைக்கும் கோரிக்கை. இதில் துளி அளவும் உண்மை இல்லை. இப்படி இந்தக் குடும்பம் அபகரிக்க நினைத்த இன்னொரு கல்லூரி டோக் பெருமாட்டிக் கல்லூரி. அங்கு இருந்த முதல்வர் இந்தப் பேராயரை ஆட்சி மன்றக் குழுவிலும் பங்கு பெற விடாமல் பார்த்துக் கொண்டார். மேலும் நகரின் மையத்தில் இருக்கும் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியை ரிலையன்ஸ் கம்பெனிக்கு விற்க தன்னுடைய மருமகன் மூலம் முயல்கிறாராம் பேராயர். இந்தத் தகவலும் சேர்ந்து பற்றி எரிகிறது. எனவே கல்லூரியைக் கொள்ளையடிக்க கிறிஸ்துவத்தின் பேரால் நிற்கிற ஒரு கூட்டமும், கல்லூரியின் ஜனநாயக மரபைக் காப்பாற்ற நினைக்கும் இன்னொரு கூட்டமுமாகக் கல்லூரி இரண்டாகப் பிரிந்தது.இப்பொழுது உள்ள நில அபகரிப்பு மற்றும் வியாபார கபளீகரச் சூழல் உயர் கல்வி நிறுவனங்களைத்தான் மிகவும் பாதித்துள்ளது. தென்மாவட்டக் கல்லூரிகளில் பல சமுதாயக் கல்லூரிகள் சில மாநில முன்னாள் மந்திரிகளால் மிரட்டி வாங்கப்பட்டுள்ளன. மதுரை தியாகராயர் கல்லூரி, கோவை பி எஸ் ஜி கல்லூரி போன்றவை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியபோது யாருக்கும் உள்ளே உள்ள மிரட்டல்களும் கல்லூரி அதிபர்கள் சந்தித்த இன்னல்களும் தெரியவில்லை. திண்டுக்கல்லில் இயங்கி வரும் G.T.N கல்லூரியை முழு விலைக்கு வாங்கியவர் இன்றைய மத்திய மந்திரிகளில் முக்கியமானவர். இதைப் பெற்றுக்கொடுத்தவர் தி மு க ஆட்சியின் மந்திரி. காங்கிரஸ் தி மு க வின் கொள்ளை ரீதியான கூட்டணி தொடரத்தான் செய்யும். நேற்று மதுரையில் ஒரு கல்லூரியின் அதிபர் வீட்டில் சிபிஐ ஏவப்படுகிறது. காரணம் அந்தக் கல்லூரியை விழுங்க நினைத்த மத்திய மந்திரி தனது மற்றத் தொழில் முதலீடுகளைத் திரும்பப் பெற கல்வி நிறுவனங்களைக் காவு கேட்கிறார். தரவில்லை என்றால் அடுத்து சிபிஐ தான். மந்திரிகள் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார்கள். எவ்வளவு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது கல்வி நிறுவனங்களையும் நிலங்களையும் தோது போட்டு அபகரிக்கிறார்கள் என்று பார்த்தால் பயம் அடி வயிற்றைப் புரட்டுகிறது. ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பித்தவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார், சொத்துகளைப் பாதுகாக்க. ஒரு அரசியல்வாதியின் அடியாள் கல்வி சாம்ராஜ்யம் கண்டு மிக வளமாக இருக்கிறார். இனப்படுகொலைக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு கல்லூரி சொந்தம். எங்கள் பகுதியின் கல் குவாரி அதிபர் தினமும் ஐம்பது ஏக்கர் பதிவு செய்துவிட்டு தான் தூங்கப் போவார். அடக்கமுடியாத பசி. பணம் பணம்… கருப்பு வெள்ளை… சீட்டுக் கட்டு என்று கொழிக்கிறார்கள்! கல்வி மூலமாக மேலே வர வேண்டும் என்று நினைக்கும் மத்திய வர்க்கம் கையறு நிலையில் உள்ளது.
கிறிஸ்துவ மிசனரிகளின் கல்வி நிறுவனங்கள் பொதுவாக நகர்களின் மையப்பகுதியில் அமைந்துள்ளன . அவற்றை வளைக்கும் பொருட்டு அரசியல், மதக் கூட்டணி உருவாகிறது. பேராயரைக் கேள்வி கேட்டால் கிறிஸ்துவைக் கேள்வி கேட்பதற்குச் சமம். எப்படிக் கேட்பார்கள்? மதப்பற்று வீங்கி வீங்கி கல்வி கற்க வேண்டிய மண்டை உறைந்துபோனது கிறிஸ்துவர்களுக்கு. இன்று கேட்பாரற்று சொத்துக்களை விற்கும் ஏகபோக உரிமை உள்ளவர்களாக வளம் வருகிறார்கள் CSI பேராயர்கள். மதுரை கிறிஸ்துவ மிசன் மருத்துவமனை இன்று வெளியே வணிக வளாகமானதும் உள்ளே குட்டிச்சுவரானதும் இவர்களால் தான். ஒரு தகவல். கருணாநிதிக்கு அருகில் நின்று சிறுபான்மைத் தோள் கொடுக்கும் எஸ் ரா சற்குணம் தான் மதுரைப் பேராயரின் கசின் (தமிழில் வார்த்தை இல்லை- மன்னிக்கவும் வாசகர்களே.) கிறிஸ்துவப் பதங்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் சமூக மாற்றத்தை விட ஏசுவுக்குள் எப்படி ஐக்கியமாவது என்பதைப் பற்றி படிக்கக் கிளம்பி விட்டார்கள். அதற்குத்தான் பேராயர் தேர்தல்கள் நடத்துகிறார்கள். தி.மு.க மாவட்டச் செயலாளரை விட CSI முக்கியப் பிரமுகரின் பிறந்த நாள் விழாவிற்கு அதிகப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பேராயர் தேர்தலில் வெற்றி பெற ஒரு மாநிலக் கட்சி அளவிற்குச் செலவழித்து அதைவிட அதிகம் ரௌடித்தனம் செய்ய வேண்டியுள்ளது. கோவைப் பேராயர் மீது எட்டு கிரிமினல் வழக்குகள் உள்ளன. பிணையில் வந்து இறைப்பணி செய்கிறார். எத்தனை மார்டின் லூதர்கள் வந்தாலும் சீர்திருத்தமுடியாத கிறிஸ்துவம் CSI கிறிஸ்துவம் தான். தூத்துக்குடியில் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரியும் என் நண்பன் சொல்கிறான், ஆசிரியை வேலை வாங்கித் தருகிறேன் என்று பாதிரியார்கள் படித்த பெண்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று.
திருச்சபைகளின் ஒழுங்கீனங்களை மெளனமாக வேடிக்கை பார்ப்பதுதான் மதச் சார்பின்மையோ? குடிமைச் சமூகத்துக்கு கட்டுப்படாத அளவிற்குப் போகிறார்கள். அரசுக்கும் அரசியல் வாதிகளுக்கும் என்ன விசேசமான பயம் வேண்டியுள்ளது? அரசாங்கமும் பொதுமக்களும் கொடுக்கும் வரிப் பணத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளன. அமெரிக்கன் கல்லூரிக்கு இடம் கொடுத்தவர்களில் முஸ்லீம்களும் இந்துக்களும் உள்ளனர். அதன் அடையாளங்களை அமெரிக்கன் கல்லூரியின் சேப்பல் கூட சொல்கிறது. வழிபடும் இடத்திலேயே சர்வ மதங்களின் அடையாளங்களையும் கொண்டுள்ளது அமெரிக்கன் கல்லூரி. இந்த உயரிய நோக்கங்கள் பற்றித் தெரியாதது போல நடிக்கும் இந்தத் தடித்தனத்தை எப்படி எதிர்கொள்வது? அப்படி அடங்காதபட்சத்தில் கல்லூரியை அரசாங்கம் எடுத்து நடத்தப் போதுமான அளவிற்கு சாதகமான அம்சமே இருக்கிறது.
அமெரிக்கன் கல்லூரி என்பது துவக்கப்பட்ட காலத்தில் இருந்தே ஆட்சி மன்றக் குழுவால் நிர்வாகிக்கப்பட்டு வரும் அமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனம். அதன் முதல் நோக்கமாக வைப்பது, தரமான சுதந்திரக் கிறிஸ்துவக் கல்வியை அனைவருக்கும் வழங்குவது என்பதுதான். இங்கே கிறிஸ்துவம் என்பது மத அடையாளமாகக் கொள்ளப்படத் தேவையில்லை. காரணம் போஸ்டன் மிசனரிகள் தங்கள் குறிப்புகளில் மத மாற்றத்தைத் தங்கள் நோக்கமாகக் கூறவில்லை, அல்லது கல்வியில் மதப்போதனையை கலக்கவேண்டும் என்று முழங்கவும் இல்லை. அமெரிக்க மிசனரிகளின் இந்தக் கொள்கையில் இன்னொரு சிறப்புப் பிரிவும் உண்டு. அதாவது, முதல் தலைமுறையாகக் கல்வி கற்க விரும்புபவர்களுக்கு முன்னுரிமை என்பதுதான். நல்ல கல்லூரிகள் என்பவை பெரும்பாலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைச் சேர்த்து பின்பு அவர்களின் வெற்றியைத் தனதாகக் கொண்டாடுவதுதான். ஆனால் அமெரிக்கன் கல்லூரி தென்தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களைத் தன்னுள் இழுத்தது. கல்விச் சேவையில் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தது. இந்தப் பின்னணியில் இந்து அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் மதுரையில் கல்விப் பணியில், போட்டியில் பின்தங்கிவிடக் கூடாது என்ற நோக்கில் கல்வி நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். காட்டாக, நான்காம் தமிழ் சங்கம் என்று அழைக்கப்படும் செந்தமிழ் கல்லூரியின் தீர்மானத்தில் இவ்வாறாகச் சொல்கிறார்கள்- `வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் கல்வியின் மூலமாக நம்மை வென்று விடுவார்கள். எனவே, தமிழ் ஆர்வலர்கள் கல்வி நிலையங்களைத் தொடங்க வேண்டும்’ என்று ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார்கள். இதே காலகட்டத்தில் மன்னர் சேதுபதியால் சேதுபதி பள்ளி துவங்கப்படுகிறது. மதுரைக் கல்லூரியும், தியாகராயர் கல்லூரியும் துவங்கப்படுகின்றன. சில சமூக அமைப்புகள் இலவச உணவுடன் கூடிய உறைவிடப் பள்ளிகளையும் துவக்கின. எப்படிப் பார்த்தாலும் மதுரையின் கல்வி, கல்விப் போட்டி, அதன் தரத்தின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக அமெரிக்கன் கல்லூரி இருந்தது என்பதுதான் உண்மை.
சுதந்திரம் பெற்ற பின்பும் சில அமெரிக்கப் பேராசிரியர்களும் முதல்வர்களும் அமெரிக்கன் கல்லூரியில் பணி புரிந்தனர். அப்பொழுது ஆட்சி மன்றக் குழுவைக் கூட்டி முடிவுகளை எடுத்துக் கொள்வார்கள். அதன்படி முதல்வர் மற்றும் செயலர் பதவியில் உள்ளவருக்கே அனைத்து அதிகாரங்களும் என்பதுதான் விதி. அன்று சமூகப் பொறுப்பில் உள்ள மனிதர்களை ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினராக்குவதும் உண்டு. இந்தப் பின்னணியில் தான் மதுரை ராமநாதபுர தென்னிந்திய கிறிஸ்துவ திருச்சபைகளின் பேராயரை உறுப்பினராக ஏற்றுக்கொண்டது ஆட்சி மன்றக் குழு. இதன் பின்பு இந்திய முதல்வர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்தப் பின்னணியில் உறுப்பினர்களின் சுழற்சி முறையில் ஆட்சி மன்றக் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பை மொத்தமாக பேராயருக்கே பட்டா போட்டு கொடுத்து கொடுக்கத் துவங்கினார்கள். அதற்குக் காரணம் கல்லூரிக்கு கிடைக்கும் சிறுபான்மை அந்தஸ்து என்பது வாதம். முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இன்றுவரை சட்டப்படி கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலாளருக்கே உண்டு. ஆனால் கல்லூரியின் ஏனைய முடிவுகளில் தலையிடும் அதிகாரத்தை பேராயருக்குக் கொடுக்கவில்லை. இன்று வந்துள்ள பேராயரோ இணையத் தளத்தில் தன்னைக் கல்லூரியின் தாளாளர் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். இதை நீதிமன்றத்தில் சொன்னால், புதிய ஆட்சியில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் வாழ்க்கை முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும். சட்டப்படி எந்த உரிமையும் கோர முடியாத இந்தப் பேராயர் எந்தப் பணிமூப்பும் இல்லாத தனது மருமகனைக் கல்லூரியின் காசாளராக நியமிக்க அன்று முதல்வர் பொறுப்பு ஏற்கும் சின்னராஜ் ஜோசப் என்பவருடன் ஒரு எழுதாத ஒப்பந்தம் செய்து கொள்கிறார். (அதென்னவோ தெரியவில்லை, மருமகன்களுக்கும் கல்வி நிறுவனங்களைச் சீர் குலைப்பதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஆம், கடந்த ஆட்சியில் மூன்று துணைவேந்தர்கள் ஆள்பவர்களின் மருமகன்கள்.) கல்லூரி நிலத்தை மதுரையின் அரசியல் ரௌடிகளின் விருப்பத்திற்கேற்ப விற்க முடிவு செய்கிறார். வணிக வளாகம் கட்ட நடந்த பேர ஆவணங்கள் வெளிவந்த பின்பும் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்கிறார் இந்தப் பேராயர்.
இரண்டாயிரத்து எட்டில் துவங்கிய இந்தப் போராட்டம் எல்லையில்லாமல் சென்று கொண்டு உள்ளது. மதுரை செல்லும் எவரும் இந்தக் கல்லூரி வளாகத்தைப் பார்த்தால் ஆசைப்படத்தான் செய்வார்கள். அப்படி ‘பெரிய குடும்பத்தவர்கள்’ ஆசைப்பட்டதன் பாதகம் அதற்குத் தரகராக செயல்பட்டவர்களால் இன்று ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஆசிரியர்களை அழைத்து விபரத்தை விளக்குகிறார். இந்த சமயத்தில் ஒரு போலி ஆட்சி மன்றக் குழுவைக் கூட்டி முதல்வரை நீக்கம் செய்கிறார் பேராயர். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் குதிக்கிறார்கள். போராட்டத்தை ஒடுக்க மாநகராட்சியின் முக்கியப் பதவியில் இருக்கும் ஒரு ரௌடியின் துணையோடு போலீஸ் அத்துமீறல் செய்து ஜார்ஜ் செல்வகுமார் என்பவரை முதல்வராக நியமிக்கிறார்கள். மாணவர்களை ரௌடிகளை வைத்து மூன்று முறை நையப் புடைக்கிறார்கள். அடக்க அடக்கத் திமிறிவரும் என்பது தெரியாமல் அந்த ரௌடிகள் மீண்டும் மீண்டும் அடக்கு முறைகளைச் செய்கிறார்கள். மாணவிகளின் புகாரின் அடிப்படையில் அன்றைய கமிசனர் மகளிர் ஆணையத்தால் கடுமையாகச் சாடப்படுகிறார். அவருக்கு இடைக்காலப் பணிநீக்கமும் கிடைக்கிறது. சென்ற ஆட்சியில் இருந்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் லட்சணம் அனைவரும் அறிந்ததே. மீண்டும் மீண்டும் போராட்டங்கள். இன்றும் ஒரு பிரிவினர் வகுப்புகளுக்கு வெளியேயும் மற்றொரு பிரிவினர் உள்ளேயும் வைத்து வகுப்புகளை எடுக்கிறார்கள். சாலமன் பாப்பையா போன்றவர்கள் கல்லூரியைக் காப்பாற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்தார்கள். ஆனால் முதல்வர் செய்த ஒரு தவறு, ஒரு குற்றவியல் வழக்கைக் கூட அந்தப் பேராயர் மேல் பதியாததுதான். அவர் இன்றும் நீதிமன்றங்களில் தன் மருமகன் மூலமாகத்தான் தனது அரசியலை வழக்காக நடத்துகிறார். நீதிமன்றம் ஏற்கனவே சொரணை வரும் அளவு கண்டித்தும் அனைத்தும் தனக்கே சொந்தம் என்று கூறி வருகிறார்.
குடிமையியல் வழக்குகளில் தீர்ப்பு வர நாளாகும். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகி விட்டது. இவ்வளவுக்கும் பின்பு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவதில் சிறுபான்மை அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை. ஒரு கல்வி இயக்குனருக்கோ இணை இயக்குனருக்கோ சட்டப்படி உள்ளதை நடைமுறைப் படுத்துவதில் என்ன சிக்கல்? ஒரு மாவட்ட வருவாய் அதிகாரியோ அல்லது நீதிமன்றமோ ஏன் எதையுமே சிக்கலாக்கி விடுகிறார்கள் என்பது புரியவில்லை. ஆம், ஆவணங்களைப் படிக்கக் கூட முடியாத அதிகாரிகள், நீதிபதிகள் தான் நமது தேசத்தின் சொத்து. மேலிடம் சொல்ல வேண்டும் என்று கீழிடமும் கீழிடம் கொடுக்கும் அறிக்கை வேண்டும் என்று மேலிடமும் மாற்றி மாற்றி பந்தாடுவதுதான் நமது நிர்வாகத்தின் தனிச் சிறப்பு. லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்து அரசியல்வாதிகளின் அன்பிற்கு ஆளாகும் நமது அதிகார வர்க்கத்தின் சிந்தனைத் திறன் மெய்சிலிர்க்க வைக்கிறது. இதற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் விதிவிலக்கல்ல. இந்தத் திருச்சபைக் கூட்டமோ சமூகநீதியைத் தங்கள் குலநீதியாக பாவித்து ஒரு கல்லூரியை சிதைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. நாடார் X தலித் சாதி அரசியலால் ஆசிரியர்கள், அலுவலர்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளார்கள். இது தவிர பணி புரியும் ஆசிரியர்களின் மனைவிமார்கள் திருச்சபை நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். அவர்களை மிரட்டி தனக்கும் ஒரு ஆசிரியர் குழுவை உருவாக்கி வைத்துள்ளார் பேராயர். இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத அரசின் நோக்கம் சந்தேகத்திற்குரியது. இப்பொழுது இந்தக் கல்லூரியின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கல்லூரியைக் காப்பாற்ற நினைப்பவர்களோ பிரார்த்தனைக் கூடங்களில் அழுது அரற்றி அல்லேலூயா பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் கல்லூரியை அபகரிக்க வரும் ஒரு குழுவிடம் மாணவர்கள் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும்? போராட நரம்பில்லாதவர்களாய் இருக்க முடியுமா? இல்லை அவர்கள் காலம் முழுவதும் போராட வேண்டுமா? ஆனால் பெற்றோர்களும் மாணவர்களும் சமூகப்பொறுப்பில்லாமல் நான் பணம் கட்டியுள்ளேன் எனக்கு காரியம் நடக்க வேண்டும் என்கிறார்கள். இந்த இழிவு சுயநிதிக் கல்லூரிகளின் வளர்ச்சிக்குப் பின்பு ஏற்பட்டது. என் அப்பா கல்லூரியில் படித்த காலத்தில் ராஜாஜியையும் நேருவையும் ஈ வே கி சம்பத்தையும் நிற்க வைத்து கேள்வி கேட்ட அரசியல் பொறுப்புணர்ச்சி இருந்தது. நான் படிக்கும் காலத்தில் இருபது பைசா பஸ் கட்டண உயர்வுக்கு சண்டை போட்டோம். நூறு ரூபாய் கட்டண ஏற்றத்துக்கு கல்லூரி முதல்வரிடம் கணக்குக் கேட்டோம். அவரும் ஒலிபெருக்கியில் பைசா வாரியாக கணக்கு சொன்னார். இன்று கல்லூரியின் பாரம்பரியம் தெரியாமல் உண்ணாவிரதம் நடத்தும் மாணவர்களுக்குப் போட்டியாக உண்ணும்விரதம் நடத்தும் பண்பாளர்களாக மாணவர்கள் உள்ளனர். அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது. காமிரா முன்பாக ஆசிரியர்களை தேவிடியாமகன் என்று முழங்கும் அரசியல் சிந்தனையும் தெளிவும் அடியாழம் வரை தெரிகிறது. மாணவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள முடியாத பொழுது எப்படி தன்னை நம்பி வருபர்களை காப்பாற்றுவார்கள்? அப்படி என்ன உப்பு உரைப்பில்லாத பயிற்சிதான் கல்வியா? அப்படி என்னதான் பெற்றோர்கள் சம்பாத்தியத்தின் மீது மட்டுமே கண்ணாக உள்ளார்களோ தெரியவில்லை. நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் எங்களுக்கு இருந்த ரௌடி என்ற பட்டப் பெயர் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. கூடப் படிக்கும் பொம்பளப்பிள்ளைகிட்ட நல்ல பெயர் வாங்கி என்ன செய்வது? மாணவர்கள் தங்கள் உரிமைக்கு போராடத் தெரியாதபோது என்ன செய்யப் போகிறார்கள் என்றே தெரியவில்லை. எனக்கு பரீட்சை நடத்து, சான்றிதழ் கொடு என்பதோடு மாணவர்கள் தங்கள் கடமை முடிந்ததாகக் கருதுகிறார்கள்.
சாதிசனத் தூய்மையைப் பேணும் ஆசிரியர் குழுவை உருவாக்க கிறிஸ்துவ நிறுவனங்கள் முனைந்தால் அது எவ்வளவு பாதகமாக முடியும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதும் இல்லை. அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்களின் அரசியல் தாங்காமல் ஓடக் கூடிய சூழலே இருக்கிறது. இவற்றையும் மீறி ஒன்றிரண்டு நல்லாசிரியர்களும் மத அரசியலுக்கு எதிர்ப்புக் கூட தெரிவிக்க முடியாமல் புழுங்குகிறார்கள். சு. வேணுகோபால் போன்ற தமிழின் தலைசிறந்த ஒரு இலக்கியவாதியை அமெரிக்கன் கல்லூரி ஒரு ஆசிரியராய்க் கூடத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், இந்த ஜாதி மத அரசியல் தவிர காரணம் என்ன இருக்க முடியும்? இன்று ஜனநாயகம் பேசும், கல்லூரியைக் காப்பாற்றுவேன் என்று சூளுரைக்கும் சின்னராஜ் ஜோசப் பல திறமையாளர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியவர் என்பதை நாம் நினைவில் கொண்டாக வேண்டும். தீர்ப்புகள் நன்றாக அமைய வேண்டுமானால் நாம் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் இவர்களின் போலி மத வேஷம் இந்தக் கல்லூரியை எந்த முன்னேற்றப் பாதையிலும் அழைத்துச் செல்லாது.
கல்லூரியின் ஆசிரியர்கள் திறமையானவர்களாய் இருப்பது முக்கியமே ஒழிய நாடாரா அல்லது தலித்தா ஏன் கிறிஸ்தவரா என்பதெல்லாம் முக்கியமில்லை. ஏற்பட்டிருக்கும் சோர்விற்கும் தொய்விற்கும் அரசும் மாவட்டக் கல்வி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும். அரசியலில் ஆடியவர்களை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். முதல்வர் நேரடியாகத் தலையிட்டு தன்னுடைய தைரியத்தை வெளிப்படுத்த இது நல்ல சந்தர்ப்பம். மாணவர்களைக் காப்பாற்றும் பொறுப்புக்கும் ஒரு அருமையான சவால். செய்வாரா?
***
3 comments:
A well written that brings out the causes and causers in a lucid way. The author needs to be appreciated.
Prof. RAJENDRA PANDIAN writes ...
"A good article even with overtones of cultural nationalism."
Post a Comment