EMBLEM

EMBLEM

Friday, June 24, 2011

அமெரிக்கன் கல்லூரி விவகாரத்தில் அரசு தலையிடக் கோரி ஆர்ப்பாட்டம்


Thinamani : 23 Jun 2011 12:12:29 PM IST



மதுரை, ஜூன் 22:
மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்னையில் தமிழக அரசு தலையிடவேண்டும், அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    மாவட்டத் துணைத் தலைவர் பெரியமருது தலைமை வகித்தார். நடராஜன் பூஜாரி, வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.எச்.பி. மாவட்டத் தலைவர் சின்மயா சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். வி.எச்.பி. மாவட்டச் செயலர் சிவராமன் வரவேற்றார். நிர்வாகிகள் சுவாதிராஜ், ரமேஷ்பாபு, பரமசிவம், நந்தகோபால், தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments: