தினமணி டிச: 15
மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் போக்கை கண்டித்து முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் தலைமையில் பேராசிரியர்கள் புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கன் கல்லூரி முதல்வர் நியமன பிரச்சனையில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. சின்னராஜ் ஜோசப் முதல்வர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், முதல்வர் பொறுப்பை உதவி முதல்வர் அன்புதுரையிடம் ஒப்படைத்துச் சென்றார். மேலும், முதல்வர் பதவி கல்வி ஆண்டுவரையில் நீட்டிக்கப்படவேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்துள்ளார்.
இந்த நிலையில், கல்லூரி முதல்வராக மோகன் என்பவரை நியமித்துள்ளதாக பேராயர் தரப்பினர் கூறியதுடன், போலிஸ் பாதுகாப்புடன் கல்லூரி முதல்வர் அறைக்கதவு பூட்டை உடைத்து கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்லூரிக்குள் சம்பந்தமில்லாதவர்களும் தற்போது நடமாடிவருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் தலைமையில் பேராசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
பல ஆயிரம் மாணவர்கள் பயிலும் கல்லூரி நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்பாட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment