தினமலர்
அக்டோபர் 20,2010,02:24 IST
மதுரை: தேனி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதி பொட்டிப்புரத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதில், விண்வெளி மற்றும் கோள்களிலிருந்து வெளியாகும் கண்ணுக்குப் புலப்படாத துகள்களை சேகரித்து ஆய்வு செய்யப்படும். இதற்கு நேற்று முன்தினம் மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்துள்ளது. இதன் தலைமை அலுவலகம் அமைக்க, மதுரை அருகே வடபழஞ்சி, கரடிப்பட்டியில் தலா 15 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கழக மதுரை தனிப்பிரிவு தலைவர் சின்னராஜ் ஜோசப் ஜெய்குமார், ""அலுவலகம் அமைக்க 30 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு அணுசக்தி துறை, மதுரை கலெக்டருக்கு விண்ணப்பிக்கும். அனுமதிக்கு பின், கட்டுமான பணி துவங்கும். இதற்கு 40 முதல் 60 கோடி ரூபாய் செலவாகும். மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பின் ஆய்வுக் கூடம் அமையும்,'' என்றார்.
No comments:
Post a Comment