* இன்றைய (மார்ச் 19, 2009) தினகரன் செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்று:
*
ஆசிரியர் அனுப்பிய மனுவை விசாரிக்க தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவு
மதுரை, மார்ச் 19.
மத்திய கண்கானிப்பு ஆணையத்திற்கு பள்ளி ஆசிரியர் அனுப்பி வைத்த மனுவை விசாரிக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் தேவராஜ் அதிசயராஜ். இவர் டில்லியில் உள்ள மத்திய அரசின் கண்காணிப்பு ஆணையத்திற்கு (சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன்) அனுப்பிய மனுவில், 'ராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணி செய்தேன். பள்ளி மதவழிபாடு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. என் மத சுதந்திரத்தில் தலையிடும் இந்த நோட்டீஸை ரத்து செய்ய மாநில மனித உரிமை ஆணையத்திற்கு மனு செய்தேன். இதன்படி என் புகார் மீது விசாரிக்க ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் என்னை பணி நீக்கம் செய்தது. மாவட்ட கல்வி அலுவலரும் முறையான விசாரணை நடத்தவில்லை. எனவே மீண்டும் இது குறித்து மனித உரிமை ஆணைத்திற்கு தெரிவித்தேன். மேல் நடவடிக்கை காலதாமதமானதால் என் மத சுதந்திரத்தில் தலையிட்டு மனித உரிமை மீறல் செய்த பள்ளி தலைமையாசிரியர் ஞான சேகரன், இதற்கு காரணமான கிறிஸ்டோபர் ஆசீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். இம்மனுவை பரிசீலித்த மத்திய கண்காணிப்பு ஆணையம், ஆசிரியர் தேவராஜ் அதிசயராஜ் மனு மீது தமிழக தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
*
No comments:
Post a Comment