*
நான் விரும்பி தொலைக்காட்சிகளில் பார்க்கும் ஒரு தொடர் 'கனா காணும் காலங்கள்'. ஒரு பள்ளியும் அதில் இருக்கும் கடைசி இரு வகுப்பு மாணவர்களுக்கும் நடுவில் நடக்கும் நிகழ்வுகளே கதைக்களன். இன்று - 14.05.2008 - நடந்த ஒரு காட்சி மனதைத் தொட்டது. பள்ளிக்கு ஒரு சோதனையான நேரம். பள்ளியை மூடும்படியான ஒரு கட்டத்தில் பள்ளியின் தாளாளரும் பள்ளியிறுதி மாணவர்களும் உரையாடும் ஒரு நல்ல காட்சி. பள்ளியின் நிலைக்காக மாணவர்கள் வருந்தி, தங்களால் பள்ளிக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி தாளாளருடன் பேசுகிறார்கள். அவர்களது உணர்வைப் புரிந்து கொண்ட பள்ளி தாளாளர் சொல்வதாக வந்த ஒரு வசனம் என்னைத் தொட்டது:
'பள்ளி என்பது வெறும் கட்டிடங்களில் மட்டும் இல்லை; அது ஒவ்வொரு மாணவரின் மனதிலும் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்' - என்பார்.
எனக்கு நம் கல்லூரியில் நடக்கும் கசப்பான நிகழ்வுகளும் அதையொட்டி பழைய மாணவர்களின் மனத்தில் எழும் வேதனைகளும் நினைவுக்கு வந்தன....
*
No comments:
Post a Comment