IPAC -Initiative for Protecting American College
கல்லூரியின் பிரச்சனைகள் உருவாகும்போதே ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் அவசரக் கூட்டம் ஒன்று 12-ம் தேதி நடந்தது. வந்திருந்தவர்கள் அனைவருமே கல்லூரியைக் காக்க வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தமான தங்கள் அவாவினையும், அதற்கான எல்லா உதவிகளையும் தர தயாராக இருப்பதைத் தெரிவித்தார்கள். அதன் தொடர்ச்சியாக பழைய மாணவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மூட்டா தலைவர்கள் Peoples Watch Committee-உடன் இணைந்து அன்று மாலையே மற்றுமொரு கூட்டம் நடத்தினார்கள். அக்கூட்டத்தில் கல்லூரியின் நலன் விரும்பிகள் பலரையும் இணைத்து ஒரு கூட்டமைப்பு ஆரம்பிக்கப் பட்டது. அதுவே IPAC – INITIATIVE FOR PROTECTING AMERICAN COLLEGE.
No comments:
Post a Comment