EMBLEM

EMBLEM

Sunday, April 20, 2008

19ம் தேதி ...பகல் முழுவதும் ...










இன்று காலை தமுக்கம் மைதானத்தில் நம் போராட்டக் குழு (IPAC -Initiative for Protecting American College) அறிவித்தபடி போராட்டம் ஏதும் நடத்த காவல்துறை சித்திரைத் திருவிழாவைக் காரணமாகக் காட்டி அனுமதி மறுத்து விட்டது. ஆகவே, தல்லாகுளம் தபால் நிலையத்தின் முன்பும், மெட்ரோ உணவு விடுதியின் முன்பும், இன்னும் ஓரிரு இடங்களிலும் இருந்து நம் கல்லூரியின் பழைய மாணவர்களும் ஓய்வு பெற்ற ஆசிரியப் பெருமக்களும் ஏற்கெனவே தயாரித்திருந்த விளக்க நோட்டீஸ்களை மக்களிடையே விநியோகித்தார்கள்.

ஓய்வு பெற்ற பேராசிரியர்களான சாலமன் பாப்பையா (தமிழ்) , வின்ஃப்ரட் (விலங்கியல்), வசந்தன், லாரன்ஸ் (ஆங்கிலத்துறை) -இவர்கள் மெட்ரோ உணவு விடுதியருகிலும், MUTA பார்த்த சாரதி, பேரா. சாமிநாதன், சுந்தர் காளி (தமிழ்) , ஆகியோரோடு நானும் தபால் நிலையத்தின் முன்பாகவும் நின்று அந்த குறு அறிக்கைகளை விநியோகித்தோம்.

19- தேதி நடத்துவதாக இருந்த போராட்டக் கூட்டத்தை 23-ம் தேதி காலை 9.30 மணிக்கு அண்ணா பேருந்து நிலையத்தில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

No comments: